
பாலிவுட் நடிகர் வருண் தவான், தனது திருமணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர் ராஜேஷ் டலாலின் மகள் நடாஷா டலால். வருண் தவானும், நடாஷாவும் பள்ளிக் காலத்திலிருந்து நண்பர்கள். ஃபேஷன் டிஸைனிங் படித்துப் பட்டம் பெற்றுள்ள நடாஷா, அவரது பெயரில் தனியாக ஜவுளி ரகம் ஒன்றைத் தயாரித்து, வியாபாரம் செய்து வருகிறார்.
வருண் தவான் நடிக்க வந்த காலத்திலிருந்தே அவரும் நடாஷாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து வருண் என்றும் பேசியதில்லை. தொடர்ந்து மவுனம் காத்துவந்த வருண் தவான், திடீரென்று திருமண அறிவிப்பை வெளியிட்டார்.
அலிபாக்கில் ஞாயிற்றுக்கிழமை அன்று நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சூழ நடந்த இந்தத் திருமணத்தின் இரண்டு புகைப்படங்களை வருண் பகிர்ந்துள்ளார்.
இந்த காதல் ஜோடிக்கு காதல் மலர்ந்தது சுவாரஸ்யாமான ஒன்று. சிறுவயது அறிமுகமாக இருந்தாலும் வளர்ந்தபின் வருண் தவான் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்க மறுத்ததார் நடாஷா. மூன்று, நான்கு முறை சொல்லியும் ஏற்கவில்லை. நம்பிக்கையை கைவிடாமல் நிச்சயம் தன்னை காதலிப்பார் என்று காத்திருந்தார். ஒரு கட்டத்தில் அது பலித்தது. வர்ணின் காதலை ஏற்றுக் கொண்டார்.
நடாஷா ஒரு பேஷன் டிசைனர். இதுவரை பலருக்கு பேஷன் டிசைனிங் செய்திருக்கிறார். அவரது திருமண உடைகளையும் அவரே டிசைனிங் செய்தார்.

இதோடு, ‘வாழ்நாள் காதல் துணை, இப்போது அதிகாரபூர்வமாக மாறியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்கள், சக பாலிவுட் கலைஞர்கள் பலரும் வருணுக்குத் தங்கள் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கரண் ஜோஹர், குணால் கோலி உள்ளிட்ட ஒருசில திரையுலக நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். திருமணம் நடந்த இடத்துக்கு வெளியே காத்திருந்த எண்ணற்ற ஊடகத்தினருக்கு திருமண வீட்டார் இனிப்புகள் வழங்கினர்.
அலிபாக்கில், மேன்ஷன் ரிசார்ட்டில் ஜனவரி 22ஆம் தேதி முதலே திருமணச் சடங்குகள் தொடங்கி கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.