
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை கொரோனாவுடன் ஒப்பிட்டு அதிமுக பிரமுகர் பேசியது கூட்டத்தில் இருந்தவர்களை நகைப்புக்குள்ளாக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது :- திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு கொரோனா தொற்று.
அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா தொற்று. பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பெண்களை கடுமையான, தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார். ஸ்டாலின் இதனைக் கண்டிக்காமல், அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார்.
வாக்காளரிடம் கடன் சொல்லியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் டி.டி.வி.தினகரன். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளரிடம் ரூ.20 டோக்கன் தந்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி கடன் வைத்திருக்கிறார், என்றும் கூறினார்.