
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பாலமேடு ஏரியில் தொடர் மழையால் அதிகளவு தண்ணீர் உள்ளது. இந்நிலையில், காட்டுப்பள்ளி அடுத்த செப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தருண் (17), அவரது தங்கை தேவி (14) ஆகியோர் பாலமேடு ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
இருவரும் கரையோரம் குளித்துக்கொண்டிருந்த நிலையில் சிறிது தூரம் உள்ளே சென்றதும் தத்தளித்தனர். அப்போது அவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனைக்கண்ட கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கும், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இருவரையும் தேடினர்.

ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு இருவரையும் சடலமாக மீட்டனர். இதனை கண்ட அவர்களின் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.