
தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் இவரது படங்களை பார்த்து ரசித்ததை விட இவரது உண்மையான குணத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ரசிகர்களாக மாறியுள்ளனர் என்பதை பல பேட்டிகளில் அவர்களே கூறியுள்ளனர்.
எல்லா நடிகர்களுக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும் அந்த திறமையில் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பார்கள். ஆனால் அஜித் வாழ்க்கையில் அப்படி கிடையாது அஜித்துக்கு ஒரு திறமை மட்டும் கிடையாது பல திறமைகளை உள்ளடக்கி உள்ளார்.
மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கிய தல அஜித் அதன் பிறகு சினிமாவில் நுழைந்து பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.
சினிமா என்பது அவரது வேலையாக இருந்தாலும் சினிமாவைத் தாண்டியும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் தல அஜித். சமீபத்தில் கூட ஹெலிகாப்டர் பைலட் டிரைனர்ராகவும் மற்றும் ஏரோ மாடலாகவும், காலேஜ் ப்ரொஃபஸர்ராகவும் தனது திறமைகளை வெளிக் காட்டி வருகிறார்.
தற்போது ரசிகர் ஒருவர் இவருக்குள் இருக்கும் பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது