
கரூர் வெண்ணைமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை திருத்தேரோட்டம் – போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் வழிபாடுகள் காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது வெண்ணைமலை பாலசுப்ரமணியன் கோவில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது
இந்த மலையைச் சுற்றி சுமார் 500 மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்
அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர் திருத்தேர் அசைந்து ஆடி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்