பிப்ரவரி 25, 2021, 1:07 மணி வியாழக்கிழமை
More

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!

  Home சற்றுமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!

  பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு தனிவிமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

  jbnadda-in-madurai
  jbnadda-in-madurai

  பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு தனிவிமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் பூரணகும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டவர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர், தொடர்ந்து இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

  தொடர்ந்து அங்கிருந்து கிளம்பியவர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கம் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டவர் மீண்டும் தங்கும் விடுதிக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
  [1/30, 12:42] ramalinga news: ஜே.பி.நட்டா தலைமையில் மாநில மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ள பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வேலம்மாள் மருத்துவமனை விடுதியில் பாஜக மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

  jbnadda-in-madurai1
  jbnadda-in-madurai1

  ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத்தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்,gk செல்வகுமார் கே.டி.ராகவன், நைனார் நாகேந்திரன், கரு நாகராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில பொதுச்செயலாளர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

  இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி, கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari