பிப்ரவரி 25, 2021, 5:08 காலை வியாழக்கிழமை
More

  செமயானது டிரை பண்ணியிருக்கிங்களா? ஆளி விதை இட்லி பொடி!

  Home சற்றுமுன் செமயானது டிரை பண்ணியிருக்கிங்களா? ஆளி விதை இட்லி பொடி!

  செமயானது டிரை பண்ணியிருக்கிங்களா? ஆளி விதை இட்லி பொடி!

  Flaxseed-Idli-Powder
  Flaxseed-Idli-Powder

  ஆளி விதை இட்லி பொடி

  தேவையான பொருட்கள்

  ஆளி விதை – 1 கப் ( Flax Seed)
  கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
  கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  சீரகம் – 1 டீ ஸ்பூன்
  வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
  வரமிளகாய் – 15 -20 ( தேவைப்படும் காரத்திற்கேற்ப)
  புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  உப்பு – தேவையான அளவு
  மஞ்சள் பொடி – 1 டீ ஸ்பூன்
  நல்லெண்ணெய் – 2 டீ ஸ்பூன்
  கறிவேப்பிலை – சிறிதளவு

  செய்முறை

  முதலில் ஆளி விதை வெறும் வாணலியில் நன்கு வறுத்து கொள்ளவும். வெடிக்க ஆரம்பிக்கும் பொழுது எடுத்து ஆற வைக்கவும். பிறகு , அதே வாணலியில் கொத்தமல்லி விதையை பொறியும் வரை வறுத்துக் கொள்ளவும். அதன் பின், 1 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

  பின் ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் புளியை வறுத்து கொள்ளவும். இவை அனைத்தும் சூடு ஆறிய பிறகு மிக்சியில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி / தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari