உங்களது காதலா காமமா? கண்டுபிடிக்க வழிகள் இதோ
காதலில், உங்களை பற்றிய விஷயங்கள் மற்றும் கடந்த கால நினைவுகள் என எதையும் உங்களது காதல் துணையிடம் மறைக்க விரும்பமாட்டீர்கள். பயமும் இருக்காது. காமத்தில், தயக்கம் இருக்கும். உங்களைப் பற்றி பேசும் போதும், உங்கள் காதல் துணையைப் பற்றி பேசும் போதும் தயக்கமும் பயமும் இருக்கும். உங்களை பற்றிய கடந்த கால நினைவுகள் வார்த்தை தவறி கூட வெளிவந்துவிட கூடாது என்கிற அச்சம் உரையாடல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை இருந்துக் கொண்டே இருக்கும்.
காதலில், வாக்குவாதம் ஏற்படும் போது தயக்கம் தலை தூக்காது. நினைத்ததை எல்லாம் பேசிவிடுவார்கள். ஆனால், கடைசியில் ஒரு கருத்தில் உடன்பாடு ஏற்படும். காமத்தில், எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேச்செடுத்தாலும் மறைத்து மறைத்து பேசுவதிலேயே நேரம் முடிந்துவிடும். கடைசி வரை எந்த உடன்பாடும் இல்லாமல், பதற்றம் மட்டுமே பாக்கி இருக்கும்.
காதலில், ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருப்பார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும், காதலரிடம் கூறிவிட்டு செய்யும் பழக்கம் இருக்கும். காமத்தில், உணர்வளவில் நெருக்கம் பாராட்டமாட்டார்கள். எப்படி மறைப்பதென்ற நோக்கம் மட்டுமே இருக்கும். நேர்மைக்கு அங்கு இடமே இருக்காது.
காதலில், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஆதரவு கரம் நீட்ட உங்கள் காதல் துணை உடனிருப்பார்கள். காமத்தில், பிரச்சனை வந்தால் காரணம் காட்டிப் பிரிந்து போக மட்டுமே முற்படுவர்
காதலில், தியாகம் என்பது பொதுவான ஒன்று. தங்களுக்கு பிடித்த விஷயங்கள் கூட காதல் துணைக்கு மன அளவில் சிறிது துன்பம் தந்துவிடும் என தோன்றினால் கூட அதை தியாகம் செய்துவிடுவார்கள். காமத்தில், சின்ன சின்ன விஷயமாக இருந்தால் கூட, மனம் ஒத்துபோகாமல் பிரிந்து சென்றுவிடுவார்கள்.
காதலில், ரகசியங்கள் என்பது இருவர் மத்தியில் பாதுகாக்கப்படும். இருவரும் ஒளிவுமறைவு இன்றி இருப்பார்கள். காமத்தில், தங்களைப் பற்றிய எந்த ஒரு ரகசியங்களும் கசிந்துவிடக்கூடாது என எண்ணுவார்கள்.
காதலில், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பொருத்தமாக இருப்பார்கள். காமத்தில், எப்போதாவது பொருத்தம் ஏற்படும் அதுவும் உடல் ரீதியான விஷயங்களுக்காக மட்டும். மற்றபடி பொருத்தம் என்பது இங்கு மொத்தம் ஏழரை தான்.
காதலில், நம்பிக்கை என்பது தான் வேர். அது வலிமையாக இருக்கும். அது இல்லையெனில் அது காதலே இல்லை. காமத்தில், ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையாக உள்ளதாக காட்டிக்கொள்ள மிக மிக போராடுவார்கள். ஆனால், அனைத்தும் ஒரு தருணத்தில் உடைந்துவிடும்.
காதலில், தவறுகளும் ஏற்றுகொள்ளப்படும். பின் நாட்களில் அதை காதல் திருத்திவிடும். காமத்தில், தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பிரிவில் போய் முடியும்.
காதலில், எவ்வளவு தூரம் கடந்திருந்தாலும், எவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தாலும், காதலின் வலிமை கூடுமே தவிர குறையாது. காமத்தில், இடைவேளை கூடும் போது வலிமை இழந்துவிடுவார்கள். அடுத்தவர் மீது உணர்வு பாதை மாறத்தொடங்கிவிடும்.