ஏப்ரல் 22, 2021, 1:35 காலை வியாழக்கிழமை
More

  ஆதார் திருத்தம்: இன்று 20 இடங்களில் முகாம்!

  aadhar
  aadhar

  கடலூர் கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில், 20 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் புதிய ஆதார் எடுக்க, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய கடலூர் கோட்டத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

  கடலூர் பீச் ரோடு அஞ்சலக அலுவலகம், நத்தப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம், வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம், கண்டரக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், திருத்துறையூர் பஞ்சாயத்து அலுவலகம்.சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி, வடலூர் புனித ஜான் உயர்நிலைப் பள்ளி, வடக்குத்து நியாய விலைக் கடை அருகே, நெய்வேலில் 19வது வட்டம் அரபிந்தோ உயர்நிலைப் பள்ளி, வட்டம் 29ல் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி.

  பரங்கிப்பேட்டை அஞ்சலகம், கிள்ளை அஞ்சலகம், புவனகிரி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா அரசு உதவி பெரும் பள்ளி, லால்பேட்டை ஜமா அத் உயர்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப் பள்ளி.ஸ்ரீமுஷ்ணம் சீதாலக்ஷ்மி ஆதிவராக அரசு உதவி பெரும் பள்ளி, பாளையங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய 20 மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

  முகாம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நடைபெறும்.

  பெயர் மாற்றம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டுவர வேண்டும்.முகவரி மாற்றம் செய்ய காஸ் ரசீது மற்றும் காஸ் புத்தகம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆன்லைன் பிரிண்ட் வேண்டும்.

  பிறந்த தேதி மாற்றம் செய்ய 10வது அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »