பாபநாசம் 2: டிவி சீரியல் மாதிரி இவருக்கு பதில் அவராம்..!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
papanadam - 2026

பாபநாசம் இரண்டாவது பாகத்தில் கமலிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

thirshyam-1
thirshyam-1

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. மோகன்லால்,மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரிஷ்யம்-2 படமானது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

kowthami - 2026

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினையும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பாபநாசம்-2 என்ற பெயரில் உருவாகும் இந்த பாகத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகவும், அதே நேரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

jothika - 2026

இதனை தொடர்ந்து தமிழில் கமலஹாசனிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.