KARUR vijayabaskar meeting - 2026

இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்; ஊழலை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, கனிமொழியும் ஆ.ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகாரில்  இருந்தார்கள் என்று கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர்  கரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கரூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை,  கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் தம்பிதுரை பேசுகையில் இந்த தேர்தல் அதிமுக இன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்க்கும் , முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி க்கும் போட்டி  திமுகக்கு இல்லை, அதிமுகவில் இருக்கும் போது அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க நினைத்தவர் செந்தில்பாலாஜி! எட்ப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில். தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக மக்கள் பாதுகாக்கப் பட்டனர். கரூர் நொய்யல் ஆற்றின் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிச்சயமாக நான் இழப்பீடு பெற்று தருவேன்.

இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஊழலை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, கனிமொழியும் ஆ.ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகார்  ஜெயிலில் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending