ஏப்ரல் 22, 2021, 2:36 காலை வியாழக்கிழமை
More

  திருச்சுழியில் தங்கம் தென்னரசு தீவிர பிரசாரம்!

  திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கிராமங்கள் தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

  thangam thennarasu - 1

  திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கிராமங்கள் தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

  திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தீவிர பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். தற்போது இதே தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் தங்கம் தென்னரசு மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்

  தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி நரிக்குடி திருச்சுழி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்

  காரியாபட்டி ஒன்றியம் ஆவியூர் அரசகுளம் குரண்டி மாங்குளம் முஷ்டக் குறிச்சி இலுப்பகுளம் நாங்கூர் தேசியனேந்தல் பல்லவரேந்த உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் தங்கம் தென்னரசு சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார

  அப்போது வாக்காளர்களிடம் அவர் பேசியதாவது : தொடர்ந்து இதே தொகுதியில் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளீர்கள் இந்த தேர்தலில் நான் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன் எப்போதும் என் மீது அன்பு கொண்ட உங்களுக்கு தொடர்ந்து சேவையாற்று வேன்

  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது திமுக ஆட்சி மீண்டும் வந்தவுடன் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதில் தீவிரமாக பணியாற்றுவேன் தொகுதியில் நிறைவேற்ற. படாமல் உள்ள . திட்டங்கள் எல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவேன்

  குறிப்பாக திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும் அரசு கலைக்கல்லூரி நிச்சயமாக அமைக்கப்படும் விவசாயிகளின் நலனுக்காக பல்யேறு திட்டங்கள் செயல்படுத்து வோம். திருச்சுழி தொகுதி வள மான தொகுதியான மாற்றுவதற்கு அயராது பாடுபடுவேன் என்று வேட்பாளர் தங்கம் தென்னரசு பேசினார் .

  வேட்பாளர் சுற்றுப் பயணத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் செல்லம் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிதம்பர பாரதி சேகர் ஆவியூர் கிளை செயலாளர் மணிகண்டன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி உமா.மகேஸ்வரி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் காராளம் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் உலக்குடி செல்வம் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் இனியவன் பாண்டிய அரசு உட்பட பலர் கலந்து கொண் டனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »