
அனைத்து சமூகத்திலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும்; அதை ஜாதியை அடிப்படை இல்லாமல் பொருளாதார பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் நல்லது… முதல்வர் எனக்கு சீட்டு வழங்குகிறேன் என்று கூறினார்… ஆனால் என் சமூக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என்று கூறி பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன் என்று, மனித உரிமைக் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பொதுவாக நடிகர்கள் ஜாதி மதம் இனம் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவானவர்கள். நானும் அரசியலுக்கு வருவதற்கு முன் அப்படி தான் இருந்தேன். ஆனால் நான் சார்ந்த இந்த கட்சி மனித உரிமைக் கட்சி, முக்குலத்தோர் உள்ள கட்சி.. இங்கு நாம் ஜாதிக்காக இல்லாவிட்டாலும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.
பொதுவாக இட ஒதுக்கீடு.. நம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதல்வருடன் கூறினேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஜாதி ரீதியாக இல்லாமல் அனைத்து சமூகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்…
நான் வசதியாக உள்ளேன்… எனக்கு எந்தவித தேவையும் இல்லை. ஆனால் நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இதுகுறித்து முதல்வரை சந்தித்த போது எனது சமூக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கூறினேன். மேலும் அவர்கள் எனக்கு சீட் தருகிறேன் என்று கூறினார்கள். ஆனால் நான் பிரச்சாரத்திற்கு மட்டும் வருகிறேன் என்றேன். தற்போது பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன்
கோவில்பட்டியில் எனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறேன். நாளை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது விரிவாக இது குறித்து பேசலாம்.. என்னுடன் இருந்த ஏராளமான பேர் மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டனர். ஆனால் சரணாலயம் அமைப்பில் இருந்து இன்று வரை என்னுடன் கூட இருக்கும் உண்மைத் தொண்டர்கள் என்னுடன் இன்றும் இருக்கிறார்கள். பிரச்சாரத்திற்காக செல்வதற்கு முன் என்னை மிரட்ட பார்க்கிறார்கள் .

நான் எனது கட்சிக்காரரிடமே கம்பு-2 கொண்டு வாருங்கள் ரொம்ப நாளாயிற்று சுற்றிப் பார்க்க (சிலம்பம்) வேண்டும் என்று கூறியுள்ளேன்… என்றார்.
மிரட்டுகிறார்கள் என்று கூறினீர்களே.. அது அ ம முக கட்சி டிடிவி தினகரன் தரப்பில் இருந்து யாரும் மிரட்டினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக், நான் இதுவரை அவரை (டி.டி.வி.யை) பார்த்ததேயில்லை. ஆனாலும் அவர் மரியாதைக்குரிய நபர் என்றார் கார்த்திக்!