ஏப்ரல் 18, 2021, 11:46 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்த காதல்! குழந்தையோடு கொன்று குளத்தில் வீசிய கொடூரம்!

  kannan 1 - 1

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதுபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி கலைச்செல்வி 22 வயதாகிறது. கல்யாணம் ஆகி 2 வருடமாகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

  இந்நிலையில், கடந்த 9.9.2020 கருப்பசாமி திடீரென உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை என்று புகார் தந்தார். இதனால் போலீசாரும் அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.

  இதனால், கலைச்செல்வியின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர் யார் யாருடன் பேசினார், குறிப்பாக கடைசியாக யாருடன் பேசினார் என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லிஸ்ட் எடுத்தனர். அப்போது, சிலம்பரச கண்ணன் என்பவர் பெயர் இருந்தது. இவருடன்தான் நிறைய முறை கலைச்செல்வி பேசியிருப்பதும் தெரியவந்தது. சின்னமனூரை சேர்ந்த சிலம்பரச கண்ணனுடன் கலைச்செல்விக்கு தவறான உறவு இருந்துள்ளதும் தெரியவந்தது.

  இதையடுத்து, சிலம்பரகண்ணனை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். சிலம்பரச கண்ணன் கறிக்கடை வைத்திருக்கிறார். இவரும் செல்வியும் கல்யாணத்துக்கு முன்பே காதலித்து வந்தார்களாம். செல்விக்கு திருமணமாகியும் உறவு தொடர்ந்து வந்துள்ளது.

  kalaiselvi - 2

  சிலம்பரச கண்ணனுக்கும் கல்யாணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்களாம். செல்வியிடம் 50 சவரன் நகையை சிலம்பரசகண்ணன் ஏமாற்றி உள்ளதும், இதுபோக அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பணம், நகையை பற்றி கலைச்செல்வி கேட்டபோதெல்லாம், அதை தர மறுத்து தகராறும் செய்திருக்கிறார் சிலம்பர கண்ணன். நகைகளை விற்று கிடைத்த பணத்தின் மூலம் சிலம்பரச கண்ணன் கார், 2 ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

  ,இதற்கு பிறகு செல்வியை கொலை செய்ய, கறிக்கடையில் வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவரை உதவிக்கு வரவழைத்துள்ளார். ராஜேஷூக்கு 18 வயதாகிறது. ஆளுக்கு ஒரு கரி வெட்டும் கத்தியை எடுத்து கொண்டு, கலைச்செல்வியை கொன்றுள்ளனர். ஒரு வயது குழந்தையை கழுத்தை நெறித்தே கொன்றுள்ளார். 2 பேரின் சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டி, ஒரு சாக்குபையில் போட்டு கொண்டு, கருங்காட்டான் குளத்தில் வீசியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

  இறுதியில் அந்த குளத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன. ஆனால், அதில் உடல் பாகங்கள் எல்லாமே எலும்புகளாக உருமாறி போய் இருந்தது. அவை போஸ்ட் மார்ட்டத்துக்கு தேனி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரு வருடம் கழித்து கொலை விவகாரம் வெளியே வந்துள்ளதால், தேனி பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது. கறிக்கடைக்காரர் சிலம்பரச கண்ணன், உதவியாளர் ராஜேஷ் 2 பேரும் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »