dmk - 2026

ஹிந்துக்களை அவமதிப்பவர்களுக்கு ஓட்டு இல்லை என ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் ஹிந்து அமைப்பினர் வீடு வீடாக ஸ்டிக்கர்கள் ஒட்டி பிரசாரம் செய்தனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, ராசா, கூட்டணியை சேர்ந்த திருமாவளவன் உள்ளிட்டோர் ஹிந்து வழிபாட்டு முறைகளை விமர்சிப்பதும், திருநீர் உள்ளிட்ட பிரசாதங்களை அவமதிப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதற்கு எதிராக, ஹிந்து அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஹிந்து அமைப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக ஸ்டிக்கர்கள் ஒட்டி பிரசாரம் செய்தனர்.

துறவியர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்தி: ஹிந்துக்களின் ஒற்றுமையை இந்த தேர்தலில் எதிரிகளுக்கு தெளிவுபடுத்துவோம்.

ஹிந்து கோயில்களின் வருவாயை ஹிந்துக்களுக்கே வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட்டத்தினர் இதுநாள் வரை செய்த ஹிந்து விரோத நடவடிக்கைகளை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஹிந்து ஓட்டு வங்கி என்ற ஒன்று உருவாவதை உணர்ந்துதான் தற்போது பல்வேறு கட்சியினரும் ஹிந்துக்களை நோக்கி வருகின்றனர். இதை வலிமைப்படுத்த ஹிந்துக்களுக்கு எதிரான கட்சியினருக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வீடுகள் தோறும் ஸ்டிக்கர்கள், நோட்டீஸ் வழங்கி வருகிறோம், என்றார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending