
தங்களிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை அவருடைய கள்ளக்காதலிகள் இருவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செருநல்லூர் பகுதியிலுள்ள கருவேல மரத்தில் 35 வயதுமதிக்க தக்க நபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.
இதை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் விசாரணை நடத்திய போலீசார் இறந்துபோன நபர் ஐயப்பன் (34) என்பது தெரியவந்துள்ளது. மேலும், செருநல்லூர் பகுதியை வசிக்கும் ஆனந்தனின் மனைவி ரஜிபாணி (34) மற்றும் ஆனந்தனின் தம்பி மனைவி கவுதமி (26) ஆகியோருடன் ஐயப்பனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் இரண்டு பெண்களையும் அழைத்து விசாரித்தனர். அவர்கள் ஐயப்பனுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை ஒப்புக்கொண்டனர்.
அந்த பெண்களின் கணவர்கள் வெளியூரில் பணி செய்து வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஐயப்பன் இரண்டு பெண்களிடமும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பழகி வந்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர இரண்டு பெண்களும் அய்யப்பனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 27-ம் தேதி போதையில் ரஜிபாணி வீட்டுக்கு வந்துள்ளார் ஐயப்பன்.
இதை கவுதமிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் ரஜிபாணி. இரண்டு பெண்களும் சேர்ந்து போதையில் இருந்த ஐயப்பனை கழுத்தை நெறித்துக் கொன்றனர்.
பிறகு அவருடைய உடலை வீட்டுக்கு பின்புறம் எடுத்துச் சென்று அங்கு உள்ள கருவேல மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
ஐயப்பன் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக ஊரார்கள் நம்பி விடுவார்கள் என அந்த இரண்டு பெண்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.