ஏப்ரல் 22, 2021, 7:48 காலை வியாழக்கிழமை
More

  நெல்லை பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வ.உ.சி., பேத்தி பிரசாரம்!

  தேசியம் காக்க தெய்வீகம் வளர்க்க தாமரை சின்னத்தில் வாக்களித்து நயினார் நாகேந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  nellai bjp maragadameenakshi - 1

  திருநெல்வேலி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், சுதந்திர போராட்ட தியாகி வ .உசிதம்பரனார் அவர்களின் பேத்தி மரகத மீனாட்சி. அவர், நெல்லை டவுண், பேட்டை , தச்சநல்லூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்!

  நெல்லையில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பேத்தி மரகதமீனாட்சி, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பிரசாரம் மேற்கொண்டார்.

  அவர் பேசியபோது… நான் என் தாத்தா வ .உ.சி யின் வழியில் தேசியத்தை காக்க பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளேன். இந்த நாட்டில் தேசியத்தை காக்க உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. எம்எல்ஏ, எம்பி., என்கிற ஆசையில் நான் சேரவில்லை. மாறாக தாத்தாவின் உயிர் மூச்சான தேசியத்தை காப்பது என் கடமை. அதற்கு ஜாதி மதம் கடந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் நபர்கள் உள்ள ஒரே இடம் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே.

  nellai bjp maragadameenakshi1 - 2

  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கிய மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்றோர் அதர்மத்தின் பக்கம் இருந்தனர்.

  நல்லவர்கள், வல்லவர்கள் ஆனாலும் ஆசிரியர்,குலத்தில் பெரியவர்கள் ஆனாலும் அதர்மத்தின் பக்கம் இருந்தால் அவர்களும் தோற்கடிக்கப் பட வேண்டியவர்களே.

  எனவே திருநெல்வேலி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்காளர்கள் நம் ஹிந்து தர்மத்தையும் இந்து கலாச்சாரத்தையும் பழிக்கும் திமுக கூட்டணியை ஜாதி மதம் கடந்து தேசியம் காக்க தெய்வீகம் வளர்க்க தாமரை சின்னத்தில் வாக்களித்து நயினார் நாகேந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… என்று பேசினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »