
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் முன்பை போல மீண்டும் வேகமெடுத்துள்ளது. தற்போது 4,200க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் முதியவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அந்த வகையில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி முதல் கட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக் கொண்டார்.