
மதுரை சித்திரை திருவிழா நடத்தப்பட வேண்டும் என்றும், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தேரோட்டம், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் அனைத்தும் நடத்தப் பட வேண்டும் ஆட்சியரிடம் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் (தமிழ்நாடு) சார்பில் மனு கொடுத்த மாநில அமைப்புச் செயலர் சுடலைமணி மாரிச்செல்வம், ஆர் கிருஷ்ணன், மலைச்சாமி, ரவி, பாக்கியநாதன், முருகன் மற்றும் மாற்றுத்தினாளி சங்கத்தினர் அனைத்து மக்கள் மற்றும் துறவிகள் துறவியர்கள் வியாபாரிகள் தொழிலாளிகள் விவசாயிகள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருமணம் தேர் திருவிழா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அரசு ஏற்பாடு செய்து தர ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் (தமிழ்நாடு) அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.