வீட்டில் தனித்திருந்த சிறுமி.. காத்திருந்து நுழைந்த கயவன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai
vankodumai

6 வயது சிறுமியை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த பேட்டலாடா பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்ற தொழிலாளி அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார்.

அதன்பின் பழனிவேல் அந்தச் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால் அச்சத்தில் பழனிவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர்களிடம் கதறி அழுதபடியே சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறியுள்ளார்.

அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் பழனி வேலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.