அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலின் நண்பராக நடித்த நடிகர் மரணம்!

சற்றுமுன் சினிமா
aburva sakothararkal
aburva sakothararkal

பிரபல நடிகர் பிரபு மேலா ரகு (60) இன்று காலமானார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்கள், கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலின் நண்பராக நடித்த நடிகர் காலமாகியுள்ளார். பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வந்தாலும் 30 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

raghu
raghu

தமிழை விட மலையாளத்தில் தான் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இறுதியாக மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் நடித்து இருந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.