
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிலும் மக்களுக்கு எளிதில் மருந்து கிடைக்கும் வண்ணம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் புதிய முயற்சியை ஈடுபட்டுள்ளது.
அதாவது, தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 40 ஆயிரம் மருந்து விற்பனையாளர்களை இணைத்து வாட்ஸ் ஆப்பில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று மருந்து விநியோகம் செய்யும் சேவையை தொடங்கியுள்ளது.
மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும். முகவரியையும் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அடுத்த 2 மணி நேரத்துக்குள்ளாக மருந்துகள் வீட்டுக்கே வந்துவிடுமாம்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர், வாட்ஸ் ஆப்பில் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கு கொண்டு வந்து மருந்துகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
கொரோனா நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் 50% தள்ளுபடி. மற்றவர்களுக்கு உற்பத்தி விலையேயே வழங்கப்படும். இந்த பணிக்காக 2 லட்சம் ஊழியர்கள் களமிறங்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாது மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவதற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஊரடங்கிலும் சேவை தொடருமென்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், வீடுகளுக்கே வந்து மருந்து விநியோகம் செய்யும் சேவை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.