
எக்காலத்திலும் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக பழங்களே இருக்கின்றன. அதிலும் கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.
அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். முலாம் பழம் நன்மைகள் கண்பார்வை முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது.
இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது
உடல் குளிர்ச்சி கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது.
கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும். –
கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள முலாம் பழங்களை சர்க்கரை சேர்த்து அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். ரத்த ஓட்டம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம்.
கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழ சாறு அருந்துவதாலும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது.
இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும்
இவை அனைத்தும் அவ்வப்போது முலாம் பழங்கள் சாப்பிடுவதால் நாம் பெற முடியும். இளமை தோற்றம் வயது முதிர்ச்சி அடையும் போது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்றவை ஏற்பட்டு முதுமையான தோற்றம் பெற செய்கிறது.
இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் முலாம் பழம் அதிகம் சாப்பிடுவதால் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.
உடல் எடை குறைப்பு உடல் எடை குறைய முலாம் பழம் உதவுகிறது. முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை மற்றும் மதிய வேளைகளில் முலாம் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும். இதயம் நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.
முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது ரத்த செல்கள் உறைவதை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. புற்று நோய் தடுப்பு நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது.
முலாம் பழங்களில் கரோட்டினாய்டு வேதிப்பொருள் அதிகமுள்ளது. எனவே முலாம் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலமாக ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்த கூடியது முலாம்பழம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் அதிகரிப்பது சத்துக்கள் அதிகம் நிறைந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குறிப்பாக கர்ப்ப காலங்களை ஏற்படக்கூடிய கால் வீக்கத்தையும் குறைக்க கூடியது இந்த முலாம் பழம்.
முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்



