
புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. தினந்தோறும் காலை மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை தினம் ஒருவர் உயிரிழக்கிறார்.
இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



