July 31, 2021, 6:37 pm
More

  ARTICLE - SECTIONS

  வைகாசி விசாகம்: நோய் அகற்றி பயம் தீர்க்கும் சுப்பிரமணிய ஸ்துதி!

  murugar-2
  murugar-2

  நீலகண்டவாகனம் த்விஷ்டபுஜம் கிரீடினம் லோலரத்ன குண்டலப்ரபாபிராம ஷண்முகம் சூலசக்திதண்ட குக்குடாக்ஷமாலிகாதரம் பாலமீச்வரம் குமார சைலவாஸினம் பஜே 1.

  மயில்வாகனன். பள்ளிரண்டு கைகளை உடையவன், மகுடம் தரித்தவன், அசைத்தாடி ஜொலிக்கின்ற ரத்னகுண்டலங்களின் ஒளியால் அழகாய் விளங்குகிற ஆறுமுகங்களை உடையவனும், சூலாயுதமும், “வேலாயுதமும், கதாயுதமும், சேவற்கொடியும், ஸ்படிகமாலையும் தாங்கியவன், பாலவடிவம் பெற்றவன் குமரமலையில் எழுந்தருளி இருப்பவனுமாகிய ஈஸ்வரனை வணங்குகிறேன்.

  வல்லிதேவயானி காஸமுல்லஸந்தமிஸ்வரம் மல்லிகாதி திவ்ய புஷ்பமாலிகாவிராஜிதம்)
  ஜல்லரீநிநாதசங்கவா தனப்ரியம் ஸதா பல்லவாருணம் குமாரசைலவாஸினம் பஜேர் 2

  வள்ளி தேவயானைகளோடு விளங்குகிறவன், மல்லிகை முதலான சிறந்த மலர்மாலைகளை அணித்தவன், ஜல்லரி, சங்கம் முதலான வாத்தியங்களில் பிரியமுள்ளவன், தளிர்போல் சிவந்த நிறமுடையவன், குமரமலையில் எழுந்தருளி இருப்பவனுமாகிய ஈஸ்வரனை எப்போதும் வணங்குகிறேன்.

  மயூராதிருடம் மஹாவாக்யகூடம் மனோஹாரிதேஹம் மஹச்சித்த கேஹம் மஹீதேவதேவம் மஹாவேதபாவம் மஹாதேவபாலம் பஜே லோகபாலம் || 3.

  மயில்வாகனத்தில் ஏறியிருப்பவன், ‘தத்வமஸி’ முதலிய மஹாவாக்கியங்களுக்குள் உள்ளார்த்தமாக விளங்குபவன், மகான்களின் உள்ளத்தை ஆலயமாகக் கொண்டவன், சுப்ரமண்யன் (பிரம்மா, விஷ்ணு முதலிய தவசிரேஷ்டர்களுக்கும் தேவனுமான), வேதங்களின் உட்கருத்தாக இருப்பவனும், மகாதேவனுக்குப் புத்திரன், உலகத்தைக் காப்பவனுமான முருகனை நான் வணங்குகிறேன்.

  ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே கபோத்காரிவக்த்ரே
  பயோத்கம்பிகாத்ரே |
  ப்ரயாணோந்முகே மய்யநாதே ததாநீம் த்ருதம்மே தயாளோ பவாகரே குஹத்வம் ||

  1. கருணைக்கடலாகிய குகப்பெருமானே! அடியேன் ஐம்புலன்களும் ஒடுங்கி அறிவிழந்து, வாயிலிருந்து கோழை வெளிப்பட, அச்சத்தால் அங்கம் நடுங்க மரணம் நெருங்கி, காப்பவர் இல்லாமல் பரிதவிக்கும்போது தேவரீர், விரைவாகவே எனது எதிரில் எழுந்தருளிக் காட்சியளித்து காப்பாற்ற வேண்டும்.

  க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத் தஹச்சிந்தி பித்நீதி மாம் தர்ஜயத்ஸு
  மயூரம் ஸமாருஹ்ய மாபீரிதி த்வம் புரஸ்ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம் || 5.

  ஹே கருணாமூர்த்தியே ! மரண காலத்தில் கொடியவர்களான யமதூதர்கள் வெட்டு, குத்து, கொளுத்து என்று இவ்வாறு என்னை பயமுறுத்தும் போது தேவரீர், திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தாங்கிக்கொண்டு விரைவில் மயில்வாகனனாக அடியேன் முன் எழுந்தருளி அபயமருள வேண்டும்

  ப்ரணம் யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வர ப்ரஸாத்ய ப்ரபோப்ரார் தனேகவாரம் ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே ந கார்யாந்தகாலே மனோகப்யுபேக்ஷா|| 6.

  கருணை நிறைந்த பிரபுவே! நான் மரணத் தருவாயில் உம்மை பிரார்த்திக்கச் சக்தி இல்லாதிருப்பேன். ஆகையால் அப்போது என்னை விட்டுவிடலாகாது என்று இப்போதே தங்களது பல தடவை விழுந்து வணங்கி மகிழ்வுபடுத்தி ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,331FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-