வெந்நீர் வாளிக்குள் விழுந்த குழந்தை! உயிரிழந்த பரிதாபம்!

சற்றுமுன் தமிழகம்
deadbody
deadbody

திருவொற்றியூர் சண்முகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்-ஜனனி தம்பதி.

இவர்களுக்கு சிவானிஸ்ரீ என்ற மகள் உள்ளார். மணிகண்டன் அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் சிவாணிஸ்ரீயை குளிக்க வைக்க வெந்நீர் வைத்து எடுத்துவந்த ஜனனி, வேறு வேலை இருந்ததால் வெந்நீரை வராண்டாவில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிவாணிஸ்ரீ வெந்நீர் இருந்த பகுதியில் விளையாடி கொண்டே சென்று எதிர்பாராத விதமாக வெந்நீர் இருந்த வாளிக்குள் விழுந்துள்ளார்.

விழுந்த சில நொடியில் குழந்தை வீறிட்டு கத்த, அங்கு ஓடி வந்த தாய் ஜனனி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த குழந்தை சிவாணிஸ்ரீ சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்பு அங்கிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாகப் உயிரிழந்தது.

குழந்தை இறந்த செய்தி கேட்டு அதன் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை உருக்குலையச் செய்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.