
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 40 வயதுள்ள தெருக்கூத்து கலைஞருக்கு மனைவியும், 16 மற்றும் 19 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.
நேற்று காலை, 10:00 மணிக்கு மனைவியும், இளைய மகளும் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தனர். மூத்த மகள் மட்டும் வீட்டில் இருந்தார். பிற்பகல், 12:00 மணிக்கு, குடிபோதையில் வந்த தந்தை, மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த மகள், தன்னை காப்பாற்றிக் கொள்ள அம்மிக்கல்லால் தலையில் அடித்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழப்பு. கீழ்பென்னாத்துார் போலீசார் பெண்ணை கைது செய்தனர்.



