Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஇந்தியாநடிகை கொடுத்த புகார்! நடிகர் கைது!

நடிகை கொடுத்த புகார்! நடிகர் கைது!

- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து அவர் கணவரும் நடிகருமான ஆதித்யன் ஜெயனை போலீசார் கைது செய்தனர்.

மம்மூட்டி, நந்திதா தாஸ், மனோஜ் கே.ஜெயன், மணிவண்ணன், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்த படம், விஸ்வதுளசி. இதை சுமதி ராம் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர் அம்பிலி தேவி.

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் பல டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவரும் மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அம்பிலி தேவிக்கும் ஆதித்யன் ஜெயனுக்கும் கருத்துவேறுபாடு ஏற் பட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் விகாரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

கடந்த 2 மாதத்துக்கு முன் குடும்ப வன்முறை புகார் தெரிவித்திருந்தார் அம்பிலி. தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை அம்பிலி தேவி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா காவல் நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார்.

குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -