ரூ.190க்கு அம்மா சிமென்ட் : 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனை

Published:

amma-cement சென்னை: தமிழகத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை மிக அமோகமாக உள்ளதாம். கடந்த 2 மாதத்தில் மட்டும் 25 லட்சம் மூட்டைகள் விற்பனையாகி உள்ளதாக அம்மா சிமென்ட் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியபோது… அம்மா சிமெண்ட் விற்பனை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட அம்மா சிமென்ட் ரூபாய் 190க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் சிமெண்ட் விலையுடன் ஒப்பிடுகையில் அம்மா சிமென்ட் விலை ரூபாய் 210 குறைவு. விற்பனை தொடங்கிய 2 மாதத்தில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 500 மூட்டைகள் விற்பனையாகி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அம்மா சிமென்ட்டுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. எனவே 3 லட்சம் சிமென்ட் மூட்டைகள் எப்போதும் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img