
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…
வங்கக் கடலில், வடக்கு ஒடிசா கடலோர பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று வலுவிழக்கும். எனவே, மீனவர்கள் மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்.
செப்.14ம் தேதியில்… நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம் நாமக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
செப்டம்பர் 15ஆம் தேதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி தேனி திண்டுக்கல் திருப்பூர் தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
செப்டம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்த அளவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியே இருக்கும்.
ஒடிசா கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதால், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில், 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.