வானிலை நிலவரம் : தெற்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீட்டர் வரை நிலவுகிறது. மேற்கு-கிழக்காக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை (trough of low pressure) தமிழ்நாட்டின் மேலாகச் செல்கிறது. இதைப் போன்ற ஒரு வானிலை அமைப்பு தமிழ்நாட்டில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய சாதகமான அமைப்பாகும்.
கனமழை எச்சரிக்கை : எனவே அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு (2 முதல் 6 அக்டோபர் வரை) தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், கேரளம், இலட்சத்தீவுகல் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். 2 மற்றும் 3ஆம் தேதிகளி தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய பெரும் வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : “ஷாஹீன்” புயல் அரபிக்கடலில் ஓமன் அருகே கரையைக் கடக்க உள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் 01.10.2021 காலை 0830 மணி முதல் 02.10.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)
விழுப்புரம் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 8;
மண்டபம், ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 7;
மோகனூர் (நாமக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), முசிறி (திருச்சி) தலா 6;
மாயனூர் (கரூர்), திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), பாம்பன் (ராமநாதபுரம்), மயிலம் AWS (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்) தலா 5;
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஊத்துக்குளி (திருப்பூர்), பொள்ளாச்சி (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), இராசிபுரம் (நாமக்கல்), அவிநாசி (திருப்பூர்) தலா 4;
குளித்தலை (கரூர்), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் (கோயம்புத்தூர்), செட்டிக்குளம், அகரம் சீகூர் (பெரம்பலூர்), பண்ருட்டி (கடலூர்), உடுமல்பேட்டை, பல்லடம் (திருப்பூர்), செஞ்சி (விழுப்புரம்), வாலிநோக்கம், கடலாடி (இராமநாதபுரம்) நாமக்கல் (நாமக்கல்), பெருந்துறை (ஈரோடு), கலவை AWS (இராணிப்பேட்டை), காரைக்குடி (சிவகங்கை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) தலா 3;
கரூர், பஞ்சப்பட்டி (கரூர்), பாலக்கோடு (தர்மபுரி), ஜி பஜார், அவலாஞ்ச், கோத்தகிரி (நீலகிரி), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), தாராபுரம், திருப்பூர் (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம், கோவை விமான நிலையம், கோவை தெற்கு (கோயம்புத்தூர்), டேனிஷ்பேட் (சேலம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சமயபுரம் (திருச்சி), கமுதி (இராமநாதபுரம்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), எட்டயபுரம் (தூத்துக்குடி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 2;
தேவாலா, குன்னூர் PTO, எமரால்ட், குன்னூர், உதகமண்டலம், மேல் பவானி, குந்தா பாலம், நடுவட்டம், கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் AWS, சூலூர், சோலையார், அன்னூர் (கோவை), விருதாச்சலம், தொழுதூர் (கடலூர்), பெரியார், தேக்கடி (தேனி), நத்தம், ஓட்டன்சத்திரம், காமாட்சிபுரம் (திண்டுக்கல்), புதுச்சத்திரம் (நாமக்கல்), சூளகிரி, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பெண்ணாகரம், மாரண்டஹள்ளி (தர்மபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை), சித்தம்பட்டி, புலிப்பட்டி, கல்லிக்குடி (மதுரை), கடம்பூர், விளாத்திகுளம் (தூத்துக்குடி), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சிவகங்கை, தேவகோட்டை (சிவகங்கை), தம்மம்பட்டி, ஏற்காடு, வீரகனூர் (சேலம்), வத்தலை அனைக்கட்டு, மருங்கபுரி, லால்குடி (திருச்சி), பெரம்பலூர், பாடலூர் (பெரம்பலூர்), தென்காசி, ஆயிக்குடி (தென்காசி) அறந்தாங்கி (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சாத்தூர் (விருதுநகர்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 1.
- முனைவர் கு.வை. பா