இன்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக மழை நீர் அகற்றப்படவில்லை என்கிற மக்கள் குறையை பகுதி வாழ் மக்களோடு,இந்து முன்னணி பாஜகவை சார்ந்த சகோதரர்களுடன் சென்றோம்.
முதல்வர் அந்த பகுதிக்கு வரும் போது பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பியதால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காரில் இருந்து இறங்கி நமது சகோதரர்களை பார்த்து என்ன அரசியல் பன்னுறிங்களா? தொலைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்!
முதல்வர் சென்ற பிறகு, பகுதி வாழ் மக்கள் கொடுத்த மனுவில் உள்ள என்னுடைய தொடர்பு எண்ணைப் பார்த்து, என்னை அழைத்து, எப்படி பாரத் மாதாகீ ஜே என கோஷம் போடலாம் என கேட்டார்?
பாரத அன்னை வெல்க என்று தானே கோஷம் போட்டோம் அதில் என்ப தவறு இருக்கிறது? என்று சொன்னேன் நான்.
மேலும் இந்த கோஷம், முதல்வர் கவனத்தை கவர்வதற்கு மட்டுமே என்று சொன்னேன். அதற்கு வேற மாதிரி ஆக்கிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தார்.
ஒரு அமைச்சர், புகார் கொடுக்க வந்தவங்களை போன் போட்டு மிரட்டுறிங்களா என கேட்டேன்? ஒரு அமைச்சர் மாதிரி பேசுங்க என்றேன். லைன் துண்டித்து விட்டார்.
94451 90115 , என்கிற இந்த எண்ணிலிருந்து தான் எனக்கு கால் வந்தது. ட்ரு காலரில் பார்த்ததில் ரவிவர்மன் என பெயர் வந்தது.
- இளங்கோவன்
சென்னை மாநகர தலைவர், இந்து முன்னணி