தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.10 புதன்கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் பலரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு கடலுார் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு நவ.10, நவ.11- இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
பெரம்பலூர் மதுரை அரியலூர் விழுப்புரம் சேலம் கரூர் கள்ளக்குறிச்சி சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் விருதுநகர் தேனி நாமக்கல் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
ராமநாதபுரம் திருச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.