நான், நீ” என நாம் கூறும்போது ஒருவனைப் பற்றிய தேஹ சம்பந்தமான விவரத்தைத்தான் கொடுக்கிறோம். ஆனால், நமது உண்மையான ஸ்வரூபம் ஆத்மாதான் என்று உணர்வதில்லை.
ஆகவே நாம் காலம்காலமாக தேஹ பாவனையைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த பந்தம் வெகுகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
எவர்கள் ஆத்மாவை அறிந்தவர்களோ, அவர்கள் இந்தப் பிறப்பு-முதுமை-இறப்பு என்கின்ற சக்கரத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டதால் அவர்களுக்கு பந்தம் இல்லை