இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை: தமிழக அரசு!

flight
flight

இனிமேல் தமிழகத்திற்கு வர, கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இ – பதிவு அவசியம் என்று அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், பயணத்திற்குக் முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ‘நெகடிவ்’ சான்றிதழை கொண்டு வருவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி இருந்தது.

இந்த நடைமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவைத் தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள், கொரோனா சான்றிதழையோ அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழையோ கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

ஆனால், தமிழகத்திற்கு வருவதற்காக இ – பதிவு செய்திருக்க வேண்டும். இ-பதிவு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 36,220 பேர் பலியாகினார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

கொரோனா தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு தற்போது, விமானப் பயணத்திற்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

தடுப்பூசி பாதுகாப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
அடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையான மோல்னுபிரவீர் அறிமுகமாகியிருப்பதும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்த மாத்திரை, கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும், இறப்பையும் குறைக்கும் என்று, இந்த முதல் வாய்வழி மருந்தை தயாரித்த மருந்து நிறுவனமான மெர்க் (Merck)கூறியுள்ளது.

அதற்போது, நம் நாட்டில் இந்த மருந்தை அனுமதிப்பது தொடர்பாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI), மருத்துவத் தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories