
திருநெல்வேலி அருகே ஒரு “தனியார் பள்ளி” யின் கழிப்பறை சுவர் இடிந்து 3 சிறுவர்கள் பலியானது நெஞ்சை உருக வைக்கும் துயரச் சம்பவம்! அந்த இளஞ் சிறார்களின் பெற்றோருக்கு இதயபூர்வமான அனுதாபங்கள்!
ஆனால் வேறு சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் – 2019ல் – மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒரு சிறுவன் இறந்தான்! அதுவும் அவர்களின் சொந்த நிலத்தில் – பொறுப்பில்லாத தாய் தகப்பனின் அலட்சியத்தால்!
அதற்கு என்ன ஒப்பாரி வைத்தன இந்த ஊடகங்கள்!
இத்தனைக்கும் அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் அப்போதைய தமிழக அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது – அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்புக் குழுவினருடனேயே இரவு பகல் பாராமல் கிடந்தார்!
ஆனால் இந்த ஒருதலைப்பட்ச மீடியாக்கள் அப்போது 24 மணி நேரமும் அந்த நிகழ்ச்சியை அப்படிப் பெரிதுபடுத்தி – இடது சாரி, நக்சல், திராவிடிய கருத்துக்களைப் பொறுக்குபவர்களை (OPINION GATHERERS) விட்டு அப்படி ஒரு ‘இந்து மத வெறுப்புப் பிரசாரத்தை’ நடத்தின.

“ஒரு தமிழ்க் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துள்ள நிலையில் – தமிழர்களே தீபாவளிக் கொண்டாட்டம் தேவையா?”- என்று இந்து துவேஷக் கூச்சல் போட்டன!
ஒரு குழந்தையின் – பெற்றோரின் அலட்சியத்தால் நிகழ்ந்த – பரிதாப மரணத்தைக் கூட இந்து மதப் பண்டிகையின் மீதான வெறுப்பரசியலாக மாற்றினார்கள்!
நேற்று பாலிமர் கூட – செய்தி ஆரம்பத்தில் – ‘திருநெல்வேலியில் ஒரு தனியார் பள்ளி’- என்றுதான் கூறியது. பிறகு விரிவான செய்தியில் – CSI ஷேஃப்டர் பள்ளி என்று கூறினார்கள்!
இன்று ‘காலைக் கதிர்’- நாளேட்டில் மிகத் தெளிவாகத் தலைப்புச் செய்தியில்…
“திருநெல்வேலி டவுனில் – மாநகராட்சிக் கட்டிடம் அருகே – கிறிஸ்தவ CSI டயோசீஸ் 1818 முதல் நடத்தும் அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளி உள்ளது”- என்று ஒளிக்காமல் மறைக்காமல் நேர்மையாகச் செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்!
நான் இந்த தனியார் டிவி சேனல் இந்து விரோத நெறியாளர் கருத்துப் பொறுக்கிகளைக் (Opinion Gatherers) கேட்கிறேன்:-
இப்போது உன்னுடைய பகுத்தறிவு – இடதுசாரி – முற்போக்கு அறிவுஜீவிகளை வைத்து விவாதம் நடத்தேன் பார்ப்போம்!
“3 தமிழ்க் குழந்தைகள் ஒரு கிறிஸ்தவப் பள்ளியின் நிர்வாக அலட்சியத்தால் உயிர் இழந்துள்ளனர் – இந்த நிலையில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவையா?”
நாம் அந்த இளம் பிஞ்சுகளின் மரணத்தை மத விவாதம் ஆக்க விரும்பவில்லை! அந்த அநாகரிகம் நமக்குத் தேவையுமில்லை!
ஆனால் இந்து விரோத ஊடகங்களே – நெறியாளர்களே – பகூத்து அறிவுக் கொழுந்துகளே, மதச்சார்பற்ற முற்போக்குப் புரட்சிக் குஞ்சுகளே… இன்று நீங்கள் அதே போல விவாதிக்கத் தயாரா என்றே கேட்கிறோம்!
- முரளி சீதாராமன்