Thirupathi - 2026

வைகுண்ட ஏகாதசி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா
Thirupathi - 2026

வரும் ஜனவரி 13ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்போது தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்களால் திருப்பதிக்கு வர இயலவில்லை.

இதனை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்.

எனவே நவம்பர் டிசம்பர் மாதங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து மழையினால் வர இயலாமல் போன பக்தர்கள் இந்த பத்து நாட்கள் மட்டும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.