டெமு விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு!

train - 2026

திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு விரைவு ரயிலின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக ஜன.26-ம் தேதி முதல் குறைக்கப்பட உள்ளது.

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் மொபைல் கேட் கீப்பர்களுடன் முதலாவது டெமு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 1.6.2019 முதல் இயக்கப்பட்டது. 149 கி.மீ தொலைவுள்ள இந்த தடத்தில் 20 ரயில் நிலையங்களும் 73 ரயில்வே கேட்டுகளும் உள்ளன.

இந்த ரயில்வே கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமிக்கப்படாததால், ரயிலிலேயே மொபைல் கேட் கீப்பர்கள் செல்வார்கள். அவர்கள் அனைத்து கேட்டுகளிலும் ரயிலில் இருந்து இறங்கி கேட்டுகளை மூடிவிட்டு, ரயில் கடந்த பிறகு கேட்டை திறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக 149 கி.மீ தொலைவை ரயில் கடக்க 7 மணிநேரம் ஆனது. இதனால், இந்த ரயிலில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் விரும்பவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 21.3.2020 முதல் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர், முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில் 4.8.2021 முதல் இயங்கி வருகிறது.

தற்சமயம், திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள 40 கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜன.26-ம் தேதி முதல் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை பயண நேரம் குறைக்கப்படுகிறது.

புதிய கால அட்டவணைப்படி, திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டைக்கும், பிற்பகல் 1 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடைகிறது.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில், பட்டுக்கோட்டைக்கு மாலை 5.34 மணிக்கும், திருவாரூருக்கு இரவு 7.45 மணிக்கும் சென்றடைகிறது.

இதன் மூலம் ரயிலின் பயண நேரம் 7 மணியில் இருந்து 4.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் பராமரிப்புப் பணிகளுக்காக செல்வதால் இயங்காது.

மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையுள்ள 25 கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமனம் செய்யப்பட்ட பின், திருவாரூரில் இருந்து காரைக் குடிக்கு பயணிகள் ரயில் 3.30 மணி நேரத்தில் செல்ல வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories