December 6, 2025, 5:48 AM
24.9 C
Chennai

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! SBI!

sbi - 2025

பொதுவாக வங்கி பயன்தாரர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் ஆகிய இணைய வசதியுள்ள கணக்குகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட்களை உருவாக்க வேண்டும் என்று RBI அறிவித்திருக்கிறது.

அதாவது தற்போதைய கால கட்டத்தில் வங்கிகளின் அனைத்து வாடிக்கையாளர்களும் இணைய சேவைகளை அதிகளவு பயன்படுத்துவதால், இதில் எந்தவித சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க எஸ்எம்எஸ் அலெர்ட்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் அனைவரும் எந்தக் கணக்குகளுக்கு அலர்ட்களை பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம்.

இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அளித்துள்ள தகவலின்படி, “நீங்கள் எஸ்எம்எஸ் எச்சரிக்கையைப் பெறுவதற்கான பரிவர்த்தனைகள் இங்கே இருக்கின்றன.

உங்கள் தேர்வின் முறையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழும்போது எச்சரிக்கையைப் பெறுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தற்போது கீழ்காணும் சேவைகளில் எஸ்எம்எஸ் அலெர்ட்களை பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கு இருப்பு மற்றும் உரிமை குறியிடுதல்.

கணக்கு இருப்பு நீக்கப்பட்டது.

பரி வர்த்தனைக்குப் பிந்தைய எச்சரிக்கை- விற்பனைப் புள்ளியில் டெபிட் கார்டு ஸ்வைப் செய்யப்பட்டது.

நிறுத்த எச்சரிக்கையை சார்பார்ப்பதற்கு – கணக்கில் வழங்கப்பட்ட காசோலை நிறுத்தப்பட்டது.

அவமதிப்பு அலெர்ட்களை சார்பார்ப்பற்கு- கணக்கில் கொடுக்கப்பட்ட உள்நோக்கி அல்லது வெளிப்புறத் தீர்வுக்கான காசோலை அல்லது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட காசோலை அவமதிப்பு.

காசோலை புத்தகச் சிக்கல் எச்சரிக்கை

கடன் வரம்பு- வரம்புக்கு மேலுள்ள அனைத்து கடன் பரிவர்த்தனைகளுக்கும் எஸ்எம்எஸ்.

இவற்றில் குறைந்தபட்சத் தொகை ரூ 5000.

டெபிட் வரம்பு – வரம்புக்கு மேலுள்ள அனைத்து டெபிட் பரிவர்த்தனைகளுக்கும் எஸ்எம்எஸ்.

இருப்பு வரம்பு – கணக்கில் இருப்பு முன்பு வரையறுக்கப்பட்ட இருப்புக்குக் கீழே குறையும் போதெல்லாம் எஸ்எம்எஸ்.

தற்போது ஆன்லைனில் SMS அலெர்ட்களை செயல்படுத்த

(SBI) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று உங்கள் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழையவும்.

மெனுவில் இருந்து ‘e-services’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

விருப்பங்களின் பட்டியலில் இருந்து “எஸ்எம்எஸ் எச்சரிக்கை சேவை” விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் கணக்குகளில் காட்டப்படும் பட்டியலில் இருந்து, நீங்கள் எஸ்எம்எஸ் அலெர்ட்களை இயக்க விரும்பும் கணக்கை தேர்வு செய்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

தற்போது நீங்கள் அறிவிப்புகளை பெற விரும்பும், காசோலை நிறுத்த கோரிக்கை, டெபிட் கார்டு கொள்முதல், புத்தகச் சிக்கல் அலெர்ட், மதிப்பிழந்த அலெர்ட், கணக்கு இருப்பு ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு நிகழ்வுகளைத் தேர்வு செய்யவும்.

அதற்கான மதிப்பை அமைத்து, அலெர்ட் தொடர்புடையதா என்பதை உறுதிசெய்து, மேலும் தொடர “அப்டேட்” பட்டனை கிளிக் செய்யவும்.

நெட் பேங்கிங் மூலம் எஸ்எம்எஸ் எச்சரிக்கை சேவையை செயலிழக்க செய்ய

ஒரு கணக்கினை தேர்ந்தெடுத்து எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் பதிவு (அ) புதுப்பிப்பு பக்கத்தில் உள்ள ஹைப்பர்லிங்கை கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் உங்கள் ஒப்புதலை பெற்ற பின், எஸ்எம்எஸ் அலெர்ட்கள் நிறுத்தப்படும்.

தற்போது SBI திருத்தப்பட்ட கட்டணங்களின்படி, சராசரியாக ரூ25000 அல்லது அதற்கும் குறைவான காலாண்டு இருப்பு வைத்திருக்கும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் காலாண்டுக்கு ஒருமுறை எஸ்எம்எஸ் எச்சரிக்கை கட்டணங்களை செலுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories