ஆசிரியர்கள் கலந்தாய்வு: ஆன்லைன் மூலம் தொடங்கியது!

transfer - 2026

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பள்ளி வாரியாக காலியாக உள்ள பணியிடங்களில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் கலந்தாய்வின் போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்தவுடன், அந்தப் பணியிடம் காலியாக காண்பிக்கப்பட்டு அவருக்கும் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் அனைத்தும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் பெறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் சரிபார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஒவ்வொரு பள்ளியிலும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த விபரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் ஆசிரியர்கள் நேரடியாகவும் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு அளிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் ஜனவரி 24 ஆம் தேதி அன்று (மாவட்டத்திற்குள்) நடைபெறுகிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய மாவட்டங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த அளவில் அனைத்து காலி பணியிடங்களும் கலந்தாய்வில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு அன்று காலையில் புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அது முடிந்த பின்னர் மாலையில் புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு, அங்கிருந்த மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வானது தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும்.

ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிரிந்து புதிய மாவட்டங்களில் பணிபுரிந்து விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அந்தந்த புதிய வருவாய் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் தெரிவு செய்யப்படும் மையத்திலேயே நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories