ஹிந்து ராஜ்ய சுல்தான் இரண்டாம் தேவராயர்! சொல் புதிதல்ல!

Published:

vijayanagara empire devaraya ii - 2026

-> சங்கர் நாராயணன்

ஹிந்து என்ற பெயர் அன்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் சக்ரவர்த்திகளில் முக்கியமானவர் இரண்டாம் தேவராய மகாராயர் காலம் பொ.யு 1426 – 1452.

அவரது மெய்கீர்த்தி.
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ
ஸ்ரீமன் மகா மண்டலேசுவர
அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
இந்து ராயசுரத்ராண இராசாதி ராசன்
இராச பரமேசுவரன்
பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர
கசவேட்டை கண்டருளிய பிரதாப
இம்மடி தேவராய மகாராயர்

தன்னை “இந்துராய சுரத்ராண” அதாவது ஹிந்து ராஜ்ய சுல்தான் என்று இரண்டாம் தேவராயர் சொல்கிறார். ஆகவே ஹிந்து என்று அரசாங்கமும், அதை ஆளும் அரசரும் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

Having said that, விஜயநகர அரசர்கள் அத்வைத, ஶ்ரீ வைஷ்ணவ, மாத்வ, சைவ சித்தாந்த, வீரசைவ, ஜைன ஸம்பிரதாயங்களை மதித்து, அந்தந்த ஆச்சார்யர்களைப் போற்றியவர்கள்.
தங்களை ஹிந்து அரசர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் எல்லா ஸம்பிரதாயத்தையும் ஒன்று போல மாற்றுகிறேன் என்று முயலாதவர்கள்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

உண்மையில் அன்று ஹிந்துக்களுக்கு விஜயநகர அரசர்களை விட்டால் வேறு நாதி இல்லை. அப்படியிருந்தும் அந்த ஹிந்து அரசர்கள் நம் சமயத்தை ஒற்றைப்படையாக மாற்ற முயலவில்லை.
இப்படி ஹிந்து என்றால் அனைத்து ஸம்பிரதாயங்களும் தத்தம் தனித்தன்மையோடு தம் வாழ்க்கையையும்,, அதே சமயம் அனைத்து ஸம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருக்கும் அடிப்படை விஷயங்களால் இணைந்தும் இயங்கும் என்பதே பாரம்பரியமாக இருந்தது.

இன்று ஹிந்து என்ற பெயரைச் “சிலர்” அனைத்து ஸம்பிரதாயங்களையும் ஒற்றைப்படைத்தன்மையாக மாற்றுவது என்று முயல்வதால், ஹிந்து என்று சொல்வதைச் ஸம்பிரதாயங்களை அனுஷ்டிப்பவர்களில் பலர் எதிர்க்கிறார்கள். ஆம். அப்போது ஹிந்து என்ற சொல் இங்கே பல ஸம்பிரதாயங்களின் தனித்தன்மையைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லத்தான் வேண்டும்.

அதேநேரம் தத்தம் ஸம்பிரதாயங்களில் உறுதியாகவும், அனைத்து ஸம்பிரதாயங்களையும் மதித்து, அவர்கள் தனித்தன்மையைப் பேணி , பொதுவான விஷயங்களில் அனைவரும்.இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கும் பலரும் ஹிந்து என்ற பெயரிலேயே பொதுக்காரியங்களில் அனைவரையும் அணைத்து இயங்குகிறார்கள். இயங்க வேண்டும்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Related articles

Recent articles

spot_img