snake 1 - 2026

கூட்டை நோக்கி வந்த பாம்பு.. குஞ்சுகளை காக்க போராடும் பறவை!

சற்றுமுன் அடடே... அப்படியா?
snake 1 - 2026

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியபை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆபத்தான பாம்பும் குட்டி பறவையும் சண்டை போடுவது தொடர்பான காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

பல அடி நீளமுள்ள ஆபத்தான பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறி பறவைக் கூட்டைத் தாக்கிய போது நடந்த காணொளியாக வெளிவந்துள்ளது.

கூட்டை காக்க பறவைக்கும் பாம்புக்கும் சண்டை நடந்தபோது, உயிரை பொருட்படுத்தாமல் தனது கூட்டை காக்க போராடியது, இணைய வாசிகளை (Social Media) ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பு கூட்டை தாக்கிய போது, பறவை உடனடியாக கூட்டை நெருங்கி வந்து உயிரை பொருட்படுத்தாமல் பாம்பை தாக்கியதை வீடியோவில் காணலாம்.

பறவைகள் பாம்பு கூட்டை விட்டு தனது வாயை எடுக்கும் வரை தாக்கிக் கொண்டே இருந்தது. பறவைகளின் தொடர் தாக்குதலால், கடைசியில் பாம்பு தாக்குதலை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியது.

இந்த வீடியோ சில நாட்களாக பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். இது nature27_12 என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.