parvathams property handover to thirupathi - 2026

ரூ.9.2 கோடி.. தன் சொத்துக்களை ஏழுமலையானுக்கு உயில் எழுதி வைத்த பக்தை!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
parvathams property handover to thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி காணிக்கை வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான பர்வதம் (76)., தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார்.

தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் அவரது கணவர் விஸ்வநாதம் மற்றும் வி. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருமலைக்கு வந்தனர்.

பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியிடம், குழந்தைகள் நல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.3.2 கோடியை நன்கொடையாக வழங்கினர்.

patvatham - 2026

மேலும், சென்னையில் உள்ள ரூ. 6 கோடி மதிப்புள்ள 2வீட்டு பத்திரத்தையும் வழங்கினர்.

இதுகுறித்து ரேவதி கூறும்போது, ”ஏழுமலையானின் தீவிர பக்தையான எனது சகோதரி பர்வதம், தான் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் ஏழுமலையானுக்கு தானமாக வழங்கி விட்டார்.

ஏற்கெனவே அவர் உயிரோடு இருக்கும்போதும் தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனைக்கு காணிக்கைகளை வழங்கி உள்ளார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.