தனியார் அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள் மறைத்து வைப்பு!

krishna Statue - 2026

சென்னையிலுள்ள தனியார் அருங்காட்சியகத்தில் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள், பல தொன்மைப் பொருள்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியத்தில் வெளிநாட்டிற்குச் சிலைகள் கடத்தப்படுவதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், தொன்மை வாய்ந்த பல சிலைகள் வெளிநாட்டிற்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

natrajar - 2026

கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடி உயரமுள்ள திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை, சிறிய நடராஜர் சிலை, சிறிய கிருஷ்ணர் சிலை, பௌத்த மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய 11 பேழைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எந்தக் கோயிலிருந்து சிலைகள் இது என்பது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதே எம்போரியத்தின் கடைக்கு வெளியே ஒரு உலோகச் சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

powtha mantra - 2026

ஏடிஜிபி நேரடியாகச் சென்று கடைக்கு வெளியே புதைக்கப்பட்டிருந்த கஜ சம்ஹார மூர்த்தி சிவன் சிலையை மீட்டனர். இந்தச் சிலையை சோதனைக்கு முன்னரே சிலர் மண்ணில் புதைத்துவைத்திருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.

இது குறித்து எம்போரியம் நிறுவன அலுவலர்களிடம் நடத்திய விசாரணையில், 1985ஆம் ஆண்டு முதல் கலைநயமிக்கச் சிலைகள், பொருள்களை விற்றுவருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தில்லியிலிருந்து வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிலைகள் தொடர்பாக எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.

powtha - 2026

இந்தச் சிலைகள், கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைப் பிடித்த பிறகே சிலை வாங்கப்பட்ட இடம் குறித்து தெரியவரும் எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories