செவ்வாய் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை 1700 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை நாளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் அந்த பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும்.நாளை 1700மது கடைகள் மூடப்படும்.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை 3-ல் ஒரு பங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிக்க வசதியாக கடந்த பிப் 17முதல் 19வரை மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.





