ajith 3 - 2026

குடும்பத்தோடு ஹோட்டல் வந்த அஜித்! வைரலான புகைப்படங்கள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சினிமா சென்னை
ajith 3 - 2026

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர்.

வரும் மார்ச் 9-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது.

ajith shalini - 2026

மார்ச் இரண்டாவது வாரத்தில் முகூர்த்த பூஜையுடன் ஐதராபாத்தில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். முதல்கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை அண்ணா சாலையை ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டாக அமைத்து வருகிறார்கள்.

முகூர்த்த பூஜை அன்றே படத்தின் டைட்டிலையும் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு ‘அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

ஏகே 61 படத்தில் அஜித் நடிக்கும் நெடிவ் ரோலிற்கான நெகடிவ் இமேஜை சமீபத்தில் போனி கபூர் வெளியிட்டிருந்தார்.

ajith 1 - 2026

நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் ‘அஜித் 61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டு, தற்போது, 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தனி பயிற்சியாளரையும் அஜித் நியமித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது கடுக்கன், தாடியுடன் அஜித் இருப்பது போன்ற, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அஜித்துடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

ajith - 2026

அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித், தனது குடும்பத்துடன் ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அஜித்தின் வித்தியாசமான லுக், அசத்தலான வில்லத்தனத்திற்கான ஹேர் ஸ்டைல் ஆகியன அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.