ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில்! குயின் ஃப்ர்ஸ்ட் லுக்!

Published:

jj - 2026

இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரியத்ர்ஷினி, லிங்குசாமி என ஒவ்வொருவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்து அதற்கான காரியங்களில் இறங்கினர். ஒரு கட்டத்தில், இதை படமாக்க நிறைய பொருட் செலவாகும் என கூறி, லிங்குசாமி, இதில் இருந்து விலகி விட்டார்.

இதற்கிடையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படியொரு முயற்சியில் இறங்கி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடர்பான புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க, அவருக்கு, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக தயாரித்து கொடுக்கும் வாய்ப்பு வந்தது.

jj 1 - 2026

அதையடுத்து, அந்த முயற்சியில் இறங்கி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸுக்காக, படமாக்கும் தீவிரத்தில் இருக்கிறார். இரு யூனிட்டுகளாக பிரித்து, வெப் சீரிஸை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவின் இளமைகால பருவம், திரைப்படங்களில் நடித்த பருவம், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது முதல் இறந்தது வரை அனைத்தையும் படமாக்கியுள்ளார்.

இந்த வெப் சீரிஸில், நடிகை ரம்யா கிருஷ்ணனை, ஜெயலலிதாவாக நடிக்க வைக்க தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். மேலும் கௌதம் மேனனுடன் இணைந்து கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

krishna vamsi - 2026

இதற்காக, ஒரு நாளைக்கு பத்து லட்ச ரூபாயை சம்பளமாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசி, ஒப்பந்தம் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன், இதற்கு முன்பாக, ஜெயலலிதா குறித்த எல்லா விஷயங்களையும் பல்வேறு தரப்பினரிடமிருந்து திரட்டி வைத்திருக்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
jayalalithaa 1 1 - 2026

ஜெயலலிதா குறித்த ஏராளமான புத்தகங்களையும் வாங்கி வந்து அதையெல்லாம் படித்து, குறிப்பும் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.வெப் சீரிஸில் நடிக்கும்போது, நடிப்பு, ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு அச்சு அசலாக ஒத்துப் போக வேண்டும் என்பதற்காகவே, நிறைய மெனக்கெட்டதாகக் கூறுகிறார் ரம்யா கிருஷ்ணன்.

இதில் ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். இளமைப்பருவ கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சோபன்பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார்.

‘குயின்’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் நடந்துவரும் நிலையில் சசிகலா கதாபாத்திரம் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘குயின்’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரும் பிரபல தெலுங்குப்பட இயக்குநருமான வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img