tiger 2 - 2026

குரங்கை பிடிக்க பாய்ந்த புலி.. கடைசியில் நடந்த சம்பவம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
tiger 2 - 2026

காட்டு விலங்குகள் தொடர்பான சமீபத்திய வீடியோ ஒன்று குரங்கை வேட்டையாடும் நோக்கத்தில் மரத்தில் ஏறிய புலி, குரங்கு விரித்த வலையில் விழுந்தது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது.

tiger - 2026

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மரத்தில் குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம். அப்போது அதனை வேட்டையாட ஒரு புலியும் மரத்தில் ஏறுகிறது. புலி தன்னை நோக்கி வருவதைக் கண்டு குரங்கு பலவீனமான மரக்கிளையைப் பிடித்துத் தொங்குகிறது.

புலியும் அதே கிளையைப் பிடிக்க முன்னோக்கி நகர்கிறது. சந்தர்ப்பத்தை சரியாக கணித்து, குரங்கு வேறொரு கிளைக்கு தாவ, புலி படு மோசமாக குரங்கு விரித்த வலையில் சிக்கியது. புலி பலமாக மரத்தடியில் விழுந்து விட்டது.

tiger 1 - 2026

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன், ‘சூழ்நிலை கைதி’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார்.

வீடியோவைப் பார்த்த பிறகு, குரங்கின் புத்திசாலித்தனத்தையும் நீங்கள் பாராட்டுவீர்கள். இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள் வீடியோவிற்கு பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.