madurai airport - 2026

தமிழக அமைச்சர்கள் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

சற்றுமுன் Featured மதுரை
madurai airport - 2026

தொழில்நுட்பக் கோளாறால், தமிழக அமைச்சர்கள் பயணம் செய்த விமானம், மதுரை விமான நிலையத்தில் மீண்டும் தரை இறக்கப்பட்டது!

மதுரையிலிருந்து 2.30-மணிக்கு சென்னை வழியாக மும்பை செல்லும் இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 162 பயணிகளுடன் மீண்டும் 3.00மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் சென்னை செல்வதற்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஸார் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட தயாராகி விமான நிலைய ஓடுபாதை செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் ஓடுபாதை க்குச்சென்று விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து. இதனால், ஒன்றரை மணிநேரம் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஐ பெரியசாமி உள்ளிட்ட 122 பயணிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.