துரத்திய புலி.. உயிர் தப்பிய பயணிகள்..

Published:

கேரளா மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலை குடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் மட்டும் செல்ல முடியும்.

இடமலை குடி செல்லும் வழியில் ரோடு பணி நடப்பதால் ஜீப்பில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டது. மாங்குளத்தைச் சேர்ந்த டோஜோ செபாஸ்டின் ஜீப்பை ஓட்டினார். இடலிபாறைகுடி அருகே பெரிய ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத வகையில் ரோட்டில் குதித்த புலி ஜீப்பை துரத்திச் சென்றது.அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த டோஜோசெபாஸ்டின் ஜீப்பை வேகமாக செலுத்தியதுடன் உடனிருந்தவர்கள் பலமாக கூச்சலிட்டனர்.

அதனால் 20 மீட்டர் தூரம் பின் தொடர்ந்த புலி சற்று பின் வாங்கி காட்டிற்குள் சென்றதால் ஜீப்பில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.மூணாறு அருகே இடமலைகுடிக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற ஜீப்பை துரத்திய புலியிடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
images 49 - 2026

Related articles

Recent articles

spot_img